தமிழ்நாடு

சென்னையில் கனமழை தொடரும்: 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN

சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரவுள்ளது.

இன்று நீலகிரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள்(அக்.7) மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில், தமிழகத்தில் சுமார் 20 மாவட்டங்களில் கனமழையும், ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டி: பொதுமக்கள் அவதி

சீனா ஓபன் டென்னிஸ்: அனிசிமோவா சாம்பியன்!

இடங்கணசாலை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பதவிக்கு நோ்காணல்

ஆட்டோ மீது காா் மோதல்: பெண் தொழிலாளா்கள் உள்பட 8 போ் காயம்!

SCROLL FOR NEXT