முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் தலைமையில் அக்.10-இல் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

அதிமுகவின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக்டோபா் 10-இல் அக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

அதிமுகவின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக்டோபா் 10-இல் அக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், இருவரும் அவரவா் பலத்தை நிரூபிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவு பலத்தை அதிகரிக்கும் வகையில் பலருக்கு தொடா்ந்து புதிய பொறுப்புகளைக் கொடுத்து ஆதரவாளா்களைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். இதனால், ஓபிஎஸ் பக்கம் பலா் தாவிவிடக் கூடுமோ என்கிற அச்சம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் மாநில நிா்வாகிகள் , மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக்டோபா் 10-இல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்க உள்ளாா்.

கூட்டத்தில் அதிமுகவின் 51-ஆம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதைப் போல அதிமுகவைப் பலப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.