புரட்டாசி சனி: ஈரோடு பெருமாள் கோயில்களில் திரளானோர் தரிசனம்!
புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோட்டில் பெருமாள் கோயில்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோட்டில் பெருமாள் கோயில்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் ஆலயம், சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலையில் உள்ள மங்கள கிரி பெருமாள் ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட படியேறி சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் மங்கள கிரி பெருமாள் ஆலயம் உள்ளது. 2,000 படிகள் உள்ள மலையின் மேல் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆதிநாராயண பெருமாள் உள்ளார்.
புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை ஒட்டி பவானி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று 2 கிலோ மீட்டர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்