கோப்புப் படம் 
தமிழ்நாடு

தாய்லாந்தைப்போன்று கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டுமா?

தாய்லாந்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்களைப் போன்று கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

DIN


தாய்லாந்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்களைப் போன்று கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியன்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அழைத்துச் செல்கின்றனர். 

ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை (Online scamming) செய்ய வலியுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மூலமாக
தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று செய்தி வர பெற்றதை தொடர்ந்து, அங்கு உள்ள தமிழ் இளைஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்துவரவேண்டிய நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும் நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை பின்வரும் எண்களுக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. +91-9600023645
2. +91-8760248625
3. 044-28515288

சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT