கொலை செய்யப்பட்ட முத்து பாண்டி 
தமிழ்நாடு

திருவாடானை அருகே தலை துண்டித்து இளைஞர் படுகொலை 

திருவாடனை அருகே செங்கமடை வழியில் உள்ள வயல் காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

DIN

திருவாடானை:  திருவாடனை அருகே செங்கமடை வழியில் உள்ள வயல் காட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாடானை அருகே செங்கமடை செல்லும் வழியில் உள்ள வயல் காட்டுப் பகுதியில் திங்கள்கிழமை  தலை துண்டித்தப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக திருவாடானை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி நிரேஷ் காவல் துறையினர் சென்று தலை மற்றும் உடல் தனித்தனியாக கிடந்ததை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில திருவாடானை அருகே செங்கமடையச் சேர்ந்த பாண்டி என்ற முத்து பாண்டி பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகளும், பல்வேறு கொள்ளை வழக்குகளும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

நேற்றிரவு முதல் பாண்டியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இன்று காலையில் செங்கமடை அருகே தலை துண்டிக்கப்பட்டு தலை தனியாகவும்,  உடல் தனியாகவும் கிடப்பதாக திருவாடானை காவல் துறையினருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவாடானை டிஎஸ்பி நிரிஷ் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் வழக்குப் பதிந்து, முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு அரசியல் பின்புலம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT