முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் திறப்பு 8,000 கன அடியாகக் குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,038 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று மாலை வினாடிக்கு 9,644 கனஅடியாகக் குறைந்துள்ளது.

அணையில் இருந்து  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.71 அடியாகவும் நீர் இருப்பு 91.42 டி.எம்.சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →