தமிழ்நாடு

ஒசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த எம்.எஸ்.தோனி!

ஒசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி

DIN

ஒசூர்: ஒசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்று தொடக்கிவைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சிப் பிரிவின் சூப்பர் கிங்ஸ் அகாதெமியுடன் பள்ளி தனது அதிகாரப்பூர்வமான இணைப்பை அறிவித்து, பள்ளி நேரத்திற்குப் பின் அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இதனை தொடக்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் பங்கேற்றார்.

இதில் 1,800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தோனி தொடங்கி வைத்தார். 1,000 ஆசிரியர்களைக் கொண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட்டுடன், பெங்களுரூவில் உள்ள எம்.எஸ். தோனி குளோபல் பயிற்சி நிறுவனத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில்  எம்.எஸ். தோனி குளோபல் பள்ளியின் நிறுவனர் ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT