பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 
தமிழ்நாடு

பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்கக் கோரி அம்மாநில முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கணக்கில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பட்டாசு விற்பனைக்கு அனுமதிகோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்காதபோது தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாட்டில் சிவகாசியைச் சுற்றியுள்ள இலட்சணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு கோப்பையை வழங்காத பாகிஸ்தான் அமைச்சருக்கு தங்கப் பதக்கம்?

நான் விஜய்யின் ரசிகை! ஆனால்... கரூர் பலி குறித்து காஜல் அகர்வால்!

தெறுழ்வீ மலர்ந்தன... தமன்னா!

அலாதி உற்சாகத்தில்... நிகிதா!

என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர்புறத்திலும் கேள்வி கேட்க வேண்டும்: செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT