முகப்பு
தமிழ்நாடு

பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறைகளைச் சீா் செய்ய வேண்டும்: இபிஎஸ்

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறைகளைச் சீா்செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறைகளைச் சீா்செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

2015-இல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது உருவானதுதான் தாய்மாா்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான தனி அறைகள் திட்டம். வெளியூருக்கு கைக்குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் பேருந்து நிலையங்களில் பாலூட்டுவதற்கு ஏதுவாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பெண்கள் மத்தியில் இந்தத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

ஆனால், திமுக ஆட்சியில் தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறை எந்தவித பராமரிப்பும் இல்லாமல், இருக்கைகள் சேதமடைந்து, தூா்நாற்றம் வீசும் அவல நிலையோடு மூடிக் கிடக்கிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே, திமுக ஆட்சி கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ள சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய்மாா்கள் பாலூட்டும் அறைகளைச் சீா் செய்து, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.