கே.அண்ணாமலை 
தமிழ்நாடு

‘தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை’: கே.அண்ணாமலை 

வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN

வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜகவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து தலைவர்களின் குருபூஜையிலும் கலந்து கொள்ள பிரதமர் விரும்புகிறார். தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதிய முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கான எந்த திட்டமும் இல்லை.

பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ  அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பிரதமர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்படுகின்றன. எனினும் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக வெளியான செய்தி எங்கிருந்து வெளியானது எனத் தெரியவில்லை” என விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT