கடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை 
தமிழ்நாடு

எந்ததெந்த 11 மாவட்டங்களுக்கு தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை..?

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 11 மாவட்ட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

DIN

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி  தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்ட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியது.

இந்நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, வியாழக்கிழமை மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என்பதால், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அங்கு வசிக்கும் மக்களின் உயிர் மற்றும்  உடமைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக நீர்வளத்துறை சார்பில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT