கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழா மேடையில் எந்த அரசுப் பொறுப்பிலும், இல்லாத கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி. 
தமிழ்நாடு

அரசு விழா மேடையில் பாஜக தலைவரா?

தமிழக அரசு விழா மேடையில் பாஜக தலைவரை அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

DIN


தமிழக அரசு விழா மேடையில் பாஜக தலைவரை அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். 

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், மத்திய அமைச்சரும், மாநில அமைச்சரும் கலந்து கொண்டிருக்கின்ற விழா மேடையில், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி அமர்ந்துள்ளதற்கு விமர்சனம் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், தமிழக அரசு விழா மேடையில் பாஜக தலைவரை அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக அரசு விழாவை ஒரு அரசியல் கட்சியின் விழாவாக மாற்றிய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.  இதை அரசு விதிகள், பல்கலைக்கழக விதிகள் அனுமதிக்கின்றதா? என கேள்வி எழுப்பியவர், தமிழக அரசு உடனடியாக இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். 

மேலும், அரசு விழாவில் மேடையில் பாஜக தலைவரை அனுமதித்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

SCROLL FOR NEXT