முகப்பு
தமிழ்நாடு

பாம்பு கடித்து கைக்குழந்தை பலியான சோகம்!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு பாம்பு கடித்து கைக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
கோப்புப்படம்
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு பாம்பு கடித்து கைக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முத்தூர் மங்கலப்பட்டி ராஜமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (26). இவர் வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்குச் சென்றிருந்த போது வீட்டில் மனைவி லாவண்யா, குழந்தைகள் நிகிலன், நிவாஷ் ஆகியோர் இருந்துள்ளனர்.

வீட்டின் தடுப்புச் சுவர் தென்னங்கீற்றுகளால் ஆனது. நான்கு வயது குழந்தை நிவாஸ் தென்னங்கீற்று தடுப்புக்கு அருகில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து குழந்தை அலறியுள்ளது.

உடனே முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை நிவாஷ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.