இந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுஇந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: இந்தி திணிப்பைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் மகேந்திரன், டேவிட் ராஜ், பிரதீப், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.