தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: இரு தீட்சிதர்கள்  கைது

சமூக நலத்துறை அலுவலர் மீனா கொடுத்த புகாரின் பேரில் ஹேம சபேசன் தீட்சிதர், விஜயபாலன் என்கிற வெங்கடேஸ்வர தீட்சிதர், ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

DIN

சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமண விவகாரத்தில் இரு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக, சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீச்சதர்களின் செயலர் ஹேம சபேச தீட்சதர், ராஜ ரத்தின தீட்சிதர், வெங்கடேஸ்வரர் தீட்சிதர் ஆகியோரை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்களின் குடும்பத்தார் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் கீழரதவீதியில் கோயிலுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி அசோக் குமார் மற்றும் டிஎஸ்பிக்கள் சபியுல்லா, கரிகால், ரூபன் உள்ளிட்ட போலீசார்கள் நள்ளிரவு விடிய விடிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சமூக நலத்துறை அலுவலர் மீனா கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட ஹேம சபேசன் தீட்சிதர், விஜயபாலன் என்கிற வெங்கடேஸ்வர தீட்சிதர், ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ராஜரத்தின தீட்சிதர் திருமணத்தின் போது 21 வயது நிரம்பாததால் அவரை பாதிக்கப்பட்டோர் என கருதி வழக்கிலிருந்து விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அன்பில் மகேஸ்

வனப் பகுதிக்குள் சுற்றுலா அழைத்துச் சென்ற எஸ்டேட் நிா்வாகத்துக்கு அபராதம்

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT