தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர் திறப்பு 1.85 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

DIN


காவிரி கர்நாடகா பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து தற்போது 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்ற பட்டு வருகிறது. 

இதன் அடிப்படையில் உபநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 85,000 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவேரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணை மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் உபரி நீர் போக்கியான  16 கண் பாலம் வழியாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் வெளியிடப்பட்டு வருகிறது

காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் ஆற்றங்கரை யோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT