தமிழ்நாடு

சேலம்: உலக ஒற்றுமையை வலியுறுத்தி 1,500 மாணவிகள் பரதநாட்டியம்!

DIN

சேலத்தில் உலக ஒற்றுமையை வலியுறுத்தி 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே நேரத்தில் பாரதியார் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.

75 ஆவது சுதந்திர தின விழா நிறைவு மற்றும் அமுத பெருவிழாவையொட்டியும், உலக ஒற்றுமையை வலியுறுத்தியும் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்ட பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், நடைபெற்ற இந்த நிகழ்வில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருட்செல்வன் ராயப்பன் தலைமை தாங்கினார். இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,550 மாணவிகள் மூவண்ண சீருடை அணிந்து ஒரே நேரத்தில் பாரதியார் பாடலுக்கு தொடர்ந்து 6 நிமிடங்கள்  பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.

இந்த நிகழ்வை பீனிக்ஸ் வோர்ல்டு ரிக்கார்டு அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. மேலும் பரதநாட்டிய நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT