தமிழகத்தில் 271 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 271 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 271 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 66 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 4,074-ஆக உள்ளது. 312 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,47,162-ஆக அதிகரித்துள்ளது.