முகப்பு
தமிழ்நாடு

பட்டியலின காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

அரசு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
ராமதாஸ் (கோப்புப் படம்)
பகிர்:

அரசு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தோ்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது.

பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது சமூக அநீதி.

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தோ்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →