முகப்பு
தமிழ்நாடு

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். 

Updated On : 18 அக்டோபர், 2022 at 8:58 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். 

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி, கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. 

இதில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் ஆகியோர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.