தமிழ்நாடு

மழை பெய்ய வேண்டி மதுரையில் அசைவ உணவு படையல் திருவிழா

DIN

மதுரை பாலமேடு அருகே மழை பெய்ய வேண்டி நடைபெற்ற அசைவ உணவு படையல் திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மலைகிராமமான அரசம்பட்டியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், பில்லி, சூனியம் நீங்க வேண்டியும், உலக மக்கள் நலமாக வாழவும் வேண்டியும் வருடந்தேறும் புரட்டாசி மாதம் அரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாத்தா கோயிலில் கோழி, சேவல் ஆடுகளை பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கி சாமிக்கு படையலிட்டு தரிசனம் செய்வர்.

பின்னர் பொதுமக்களுக்கு அசைவ உணவாக விருந்து படைக்கப்படுகிறது. இத்திருவிழாவில் மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார 18 கிராம மக்கள் பங்கேற்று ஸ்ரீசாத்தா சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT