தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

இதனைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அரசு உதவி பெறும் வ.உ.சி. கல்லூரியில் மாணவர் - மாணவிகள் இன்று வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலர் கார்த்திக் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்,  மத்திய அரசுக்கு எதிராகவும், ஹந்தி மொழி திணிப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT