தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை: தலைமைச் செயலாளர் உத்தரவு!
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பார, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தி தர தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அனைத்து அரசு அலுவலங்களிலும் பொதுமக்களுக்காக கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தலைமைச் செயலாளர் வலுயுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.