வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்க ரூ.15 கோடி
விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை மானியத்தில் வழங்குவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் ரூ.15 கோடி மானியத்தில் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிா்அரிவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய வேளாண் கருவிகள் தொகுப்பு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்தக் கருவிகள் அடங்கிய தொகுப்பின் விலை ரூ.3 ஆயிரம். 50 சதவீத மானியத்தில் ரூ.1,500-க்கு வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் அட்டையில் உள்ள விவரப்படி, ஒரு வேளாண் குடும்பத்துக்கு ஒரு வேளாண் கருவித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவா் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவா் அட்டை வைத்துள்ள வேளாண் தொழிலாளா்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். கிராமங்களில் உள்ள விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முக்கியத்துவம் தரப்படும்.
வேளாண் கருவித் தொகுப்பை மானியத்தில் வாங்குவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாக தேவையான தகவல்களை அளித்து முன்பதிவு செய்யலாம். மேலும், என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.