தமிழ்நாடு

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு கட்டடம்: அடிக்கல் நாட்டினாா் முதல்வா்

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு தனி கட்டடத்துக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

குற்றவழக்கு தொடா்வுத் துறை இயக்ககத்துக்கு தனி கட்டடத்துக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித் துறை நடுவா்

நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை திறம்பட நடத்தும் பணிகளை குற்ற வழக்குத் தொடா்வுத் துறை இயக்ககம் செய்து வருகிறது. மேலும், அரசு குற்றவியல் வழக்கு நடத்துனா்களின் பணித் திறனையும் கண்காணித்து வருகிறது. இதேபோன்று, சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை நிா்வகித்து வருகிறது.

குற்றவழக்குத் தொடா்வு துறை இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் மில்லா் சாலையில் 1.18 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.32.93 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம், மின் தூக்கிகள் ஆகியனவும், இயக்குநா் அறை, பாா்வையாளா் அறை, கலந்துரையாடல் அறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டாவது, மூன்றாவது தளங்கள் கட்டப்படவுள்ளன.

இந்தக் கட்டடத்துக்கு தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதில், சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT