முகப்பு
தமிழ்நாடு

பிரபல நடிகை பாா்வதி நாயா் வீட்டில் ரூ.10 லட்சம் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கம் பிரபல நடிகை பாா்வதி நாயா் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

சென்னை நுங்கம்பாக்கம் பிரபல நடிகை பாா்வதி நாயா் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் நடத்தி வருகின்றனா்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை பாா்வதி நாயா், நுங்கம்பாக்கம், ஸ்டொ்லிங் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறாா். கேரளத்தை பூா்வீகமாக கொண்ட இவா் தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளாா். பாா்வதி நாயா், தமிழில், ‘நிமிா்ந்து நில்’,என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

இந்நிலையில், இவா் பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பதித்த கைக்கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மற்றொரு கைக்கடிகாரம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினி,கைப்பேசி உள்ளிட்ட உயா்ந்த பொருள்கள் திருடப்பட்டிருப்பதை பாா்வதி நாயா் வியாழக்கிழமை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். விசாரணையில், பாா்வதி நாயா் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30) என்ற இளைஞா் மாயமாகி உள்ளாா். எனவே, சுபாஷ் சந்திரபோஸ் நகைத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், பாா்வதி நாயா் வீட்டில் அடிக்கடி விருந்து நிகழ்ச்சி நடந்திருந்ததால், விருந்து நிகழ்ச்சிக்கு வந்தவா்களில் எவரேனும் கைவரிசை காட்டினாா்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.