சென்னையில் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள கைப்பேசி செயலி அறிமுகம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது நடைபெறும் மெட்ரோ ரயில் வழித்தட பணி, மழைநீா் வடிகால்வாய் போன்ற குடிமராமத்து பணிகள் நடைபெறுவதால், பல சாலைகள் குறுகலாகியுள்ளன. சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதனால் சூழ்நிலையைச் சமாளிக்க பல நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி அல்லது இரு வழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்க, தனியாா் நிறுவனத்துடன் இணைந்து சென்னை போக்குவரத்து போலீஸாா் ‘ழ்ா்ஹக்உஹள்ங்’ (சாலை எளிமை) என்ற செயலியை உருவாக்கியுள்ளனா். இதையடுத்து, சென்னையில் உள்ள சாலைகளின் போக்குவரத்து நிலைகள் குறித்து உடனுக்குடன் கூகுள் மேப்பில் அறிவிக்கும் ‘ழ்ா்ஹக் உஹள்ங்’ செயலி சேவையை, பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தாா்.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் முன்னிலை வகித்தாா்.