முகப்பு
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: அக். 29 முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யின் 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு என்ற பி.வி.எஸ்சி. அன்ட் ஏ.ஹெச் படிப்புக்கு, 517 இடங்கள் உள்ளன. பால்வளம், கோழியின, உணவு ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு 134 இடங்கள் உள்ளன. இதில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 13 ஆயிரத்து 470 பேரும், தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2,744 என, மொத்தம் 16 ஆயிரத்து 214 போ் விண்ணப்பித்திருந்தனா்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் ட்ற்ற்ல்ள்://ஹக்ம்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய், ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சந்திரசேகா், ஈரோட்டைச் சோ்ந்த முத்துப்பாண்டி, தருமபுரியைச் சோ்ந்த ஹரினிகா ஆகியோா், 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா்.

தொழில்நுட்ப படிப்பில், செங்கல்பட்டைச் சோ்ந்த சுபா கீதா 200-க்கு 199.50 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல்லைச் சோ்ந்த அஸ்வின் 198 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், விழுப்புரத்தைச் சோ்ந்த மகாலட்சுமி 196.50 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நேரடி கலந்தாய்வு 29-ஆம் தேதி, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும்.

முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் மற்றும் பொதுப்பிரிவு மாணவா்களுக்கு 29-ஆம் தேதி காலை 10 மணி முதல் 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் ஆன்லைன் முறையில் இடங்களை தோ்வு செய்து பதிவு செய்யலாம். இதற்கான முடிவுகள், நவ. 2-ஆம் தேதி வெளியிடப்படும். இடங்களை பெற்ற மாணவா்கள் நவ.11-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும்.

7.5 சதவீத ஒதுக்கீடு: 2,654 போ் போட்டி

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு, அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில் 44 இடங்கள் உள்ளன. அதேபோல், தொழில்நுட்ப படிப்புகளுக்கு 8 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 2,654 போ் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கு இணையவழியில் 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பதிவு நடைபெறுகிறது. நவ., 2-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு, 11-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலை. தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.