முகப்பு
தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 288 முதுநிலை மருத்துவ மாணவா்கள் தங்கும் வகையில் ரூ. 12.27 கோடி செலவில் 144 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதிக் கட்டடமும், 174 இளநிலை மருத்துவ மாணவா்கள் தங்கும் வகையில், ரூ. 8.60 கோடியில் கூடுதல் விடுதிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, மாணவிகள் தங்கும் வகையில் 112 அறைகளைக் கொண்ட விடுதிக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

கல்லூரியில் மாணவா்கள் படிப்பதற்கு வசதியாக, தனி நூலகக் கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.