முகப்பு
தமிழ்நாடு

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 22 அக்டோபர், 2022 at 2:01 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு (2021,2022) விண்ணப்பங்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகவல் தொழில் நுட்ப வளா்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளா்ச்சித்துறை வாயிலாக ‘முதல்வா் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டுவருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

அவ்வகையில் 2021-ஆம் ஆண்டுக்குரிய முதல்வா் கணினித் தமிழ் விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. மேலும் 2021-ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022- ஆம்ஆண்டுக்கு தனியா் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளா்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ளமென்பொருள்கள் 2018, 2019, 2020, 2021- ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

Advertisement

இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு டிச.31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் இது குறித்து கூடுதல் தகவல் பெற

044 - 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்கள், என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.