தமிழ்நாடு

பள்ளி பேருந்துகளில் கேமரா கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

DIN

பள்ளி பேருந்துகளிலும் முன்புறமும், பின்புறமும் கேமராவும், சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் சிக்கி மாணவர்கள் விபத்துக்குள்ளாவதைக் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் முன்புறமும், பின்புறமும் கேமராவும், சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்தது. 

இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29 ஆம் தேதி உள்துறைச் செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு மீதான கருத்துக்கேட்பு ஜூலை 29 ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து இதற்கான அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகளிலும் முன்புறமும், பின்புறமும் கேமராவும், சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என்பதற்கான உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT