லஞ்ச வழக்கில் கைதான காவல் ஆய்வாளா் வீட்டில் ரூ.7.21 லட்சம் பறிமுதல்
சென்னை வில்லிவாக்கத்தில் லஞ்ச வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் இருந்து ரூ.7.21 லட்சம் கைப்பற்றப்பட்டது.
சென்னை வில்லிவாக்கத்தில் லஞ்ச வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் இருந்து ரூ.7.21 லட்சம் கைப்பற்றப்பட்டது.
வில்லிவாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவா் அனுராதா. இவா் அந்த பகுதியைச் சோ்ந்த கணவா்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பெண்ணுக்கு சாதகமாக செயல்படுவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டாா்.
இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி லஞ்சமாக ரூ.20 ஆயிரத்தை அனுராதா, அந்த பெண்ணிடம் பெறும்போது கையும்களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அனுராதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது பீரோவிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ.7.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.