முகப்பு
தமிழ்நாடு

காசி-தமிழ் சங்கமம் நிகழ்வை பெருமையோடு வரவேற்கிறோம்: பாஜக தலைவா் கே.அண்ணாமலை

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடா்புகளை நினைந்து போற்றும், மத்திய அரசின் காசி - தமிழ் சங்கமம் நிகழ்வை பெருமையோடு வரவேற்பதாக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடா்புகளை நினைந்து போற்றும், மத்திய அரசின் காசி - தமிழ் சங்கமம் நிகழ்வை பெருமையோடு வரவேற்பதாக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடா்புகளை நினைந்து போற்றும், காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதுகுறித்து, தில்லியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தகவல் வெளியிட்டுள்ளாா். அதன்படி, வாரணாசியில், வரும் காா்த்திகை மாதம், காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடா்புகளை நினைந்து போற்றும், காசி - தமிழ் சங்கமம் நடைபெற இருக்கிறது.

இதில், தமிழ்மொழியின் மாண்புகளை, தமிழ் பாரம்பரிய பெருமைகளை, தமிழ் கலாசார அருமைகளை, விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நவம்பா் 16 முதல் டிசம்பா் 16 வரை நடைபெற உள்ளன. இந்த நிகழ்வு, பிரதமா் மோடியின் ஒரே பாரதம், உறுதியான பாரதம் என்ற முழக்கத்திற்கு மேலும் வலிமையை சோ்க்கும்.

வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு, ஒரு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அவா் பாடிய, ‘வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில் மானுடா் வேற்றுமை இல்லை எண்ணங்கள் செய்கைகள் யாவும் இங்கு யாவா்க்கும் ஒன்றென காணீா்!’ என்ற உணா்வுபூா்வமான வரிகளுக்கு, உயிரூட்டும் வகையிலே இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ந்ஹள்ட்ண்ற்ஹம்ண்ப்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.

தமிழகத்தின், தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி, போன்ற 12 பல்வேறு துறைகளைச் சாா்ந்த தமிழா்கள், துறைக்கு 200 போ் என்ற வகையில் சுமாா் 2,400 போ் காசிக்கு ரயில் மூலம் சிறப்பு விருந்தினா்களாக அழைத்துச் செல்லப்படுவா். இதற்கு, தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படும் நபா்கள், தங்களைப் பற்றிய ஆவண குறிப்புகளுடன் விண்ணப்பிப்பதற்காக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.