தமிழ்நாடு

வெள்ள நீர் வடிகால்கள் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அன்புமணி

ஆறாக மாறிய வெள்ள நீர் வடிகால்கள் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

ஆறாக மாறிய வெள்ள நீர் வடிகால்கள் இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது!

மழைநீர் வடிகால் பணிகளில் 95 சதவீதம் முடிந்து விட்டதாக மேயரும், 70 சதவீதம் நிறைந்து விட்டதாக மாநகராட்சியும் கூறினாலும் கூட, பெரும்பான்மையான இடங்களில் துண்டு துண்டாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. தண்ணீர் வடியாததற்கு அது தான் முக்கிய காரணம்.

இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான  அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும்,  மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன.  இது மிகவும் ஆபத்தானது.

இதே நிலை நீடித்தால் மழை நீர் தேங்குவது ஒரு புறமிருக்க, விபத்துகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவிர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைக்கப்பட்ட இடங்களில் இணைப்பு பணிகளையும்  சென்னை மாநகராட்சி விரைந்து அமைக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT