முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த வட மாநிலத் தொழிலாளர்கள்!

பின்னல் நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

திருப்பூர்: பின்னல் நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து - சென்னை வரை செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரயிலில் இன்று அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது. பயணிகள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு ரயிலில் ஏறி கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

மேலும், ரயில் பணியில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறி பெட்டிகளில் இடமில்லாததால் ரயில் படியிலேயே பயணம் மேற்கொண்டனர்.

அதேபோன்று ரயில் முன்பதிவு மையத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய சனிக்கிழமை காலை முதலே வடமாநிலத் தொழிலாளர்கள் குவிந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 25 ரயில்வே காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →