முகப்பு
தமிழ்நாடு

இரா.முத்தரசனுக்கு கரோனா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
இரா.முத்தரசன்
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொற்று பாதிப்பு குறைந்தவுடன் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த முத்தரசனுக்கு கடந்த சில நாள்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரது வயது மற்றும் இணை நோய்களைக் கருத்தில் கொண்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். நெஞ்சக சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் மிதமான சளி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ரெம்டெசிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் முத்தரசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவா் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.