கே.அண்ணாமலை 
தமிழ்நாடு

கோவை காா் வெடிவிபத்தின் மர்மம் விலக நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை 

கோவை உக்கடத்தில் காா் வெடிவிபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

DIN


கோவை உக்கடத்தில் காா் வெடிவிபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த காா் வெடி விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. 

தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை பாஜக வரவேற்கிறது. 

தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த வெடி விபத்தின் மா்மம் விலக காவல்துறை போதிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT