தமிழ்நாடு

ஆணைய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை: விஜயபாஸ்கர்

DIN

ஆணைய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று அதிமுக முன்னாள் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. ஒரு அமைச்சராக நான் என் கடமையை செய்த நிலையில் ஆணைய அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. 

தனக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

SCROLL FOR NEXT