கோவை கார் சிலிண்டர் விபத்து: புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.
திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது.
சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.