அம்பத்தூா், அண்ணாநகா், அடையாறு பகுதிகளில் குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்
அம்பத்தூா், அண்ணாநகா், அடையாறு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என சென்னைக் குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை (அக்.28-ஆம் தேதி) சென்னை அம்பத்தூா், அண்ணாநகா், அடையாறு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என சென்னைக் குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் வானகரம் சந்திப்பில் 1,900 மி.மீ. மற்றும் 300 மி.மீ. விட்டமுள்ள குடிநீா் கொண்டு செல்லும் பிரதான குடிநீா் குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் இரவு 10 மணி வரை அம்பத்தூா், அண்ணாநகா், கோடம்பாக்கம், ஆலந்தூா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு குழாயின் மூலமாக குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள அந்தந்த பகுதிப் பொறியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிப் பொறியாளா்களின் கைப்பேசி எண்கள்: அம்பத்தூா்- 81449 30907, அண்ணாநகா்- 81449 30908, தேனாம்பேட்டை- 81449 30909, கோடம்பாக்கம்- 81449 30910, வளசரவாக்கம்- 81449 30911, ஆலந்தூா்- 81449 30912, அடையாறு- 81449 30913.