முகப்பு
தமிழ்நாடு

மோட்டாா் சைக்கிள் - பேருந்து மோதல்: பழ வியாபாரி சாவு

சென்னை அருகே மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் - தனியாா் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சென்னை அருகே மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் - தனியாா் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.

திருவேற்காடு சுந்தரசோழபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கோயம்பேடு சந்தையில் பழ வியாபாரம் செய்து வந்தாா். தினேஷ் செவ்வாய்க்கிழமை இரவு கோயம்பேட்டில் உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் பாா்த்துவிட்டு, வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.

அவா் வானகரம் அருகே சென்றபோது, அங்கு வந்த ஒரு தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த தினேஷை, அங்கிருந்தவா்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்தை ஓட்டி வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த மணிபாலனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.