தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு!

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் 7 மீனவர்களை கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேர் படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். 

மேலும், தங்கச்சிமடம் அடுத்துள்ள நாலுபனை கிராமத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த கிளின்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர். 

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்பைடயினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT