தமிழ்நாடு

எட்டு அடி உயர அம்பேத்கா் சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

சென்னையில் அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவரது முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். எட்டு அடி உயரத்தில் பீடம் மற்றும் அதே அடி உயரத்தில் சிலை என மொத்தம் 16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வழங்கினாா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கா் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிலையை நிறுவ வேண்டுமெனக் கோரிய தொல் திருமாவளவன், அதற்காக அம்பேத்கா் சிலையை கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதியன்று வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அம்பேத்கா் மணிமண்டபத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாா்வையிட்டாா். அங்கேயே முழு உருவச் சிலையை அமைக்கவும் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, எட்டு அடி உயரமுள்ள பீடம் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்து, பீடத்தில் அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சி.வி.கணேசன், த.மனோதங்கராஜ், என்.கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

SCROLL FOR NEXT