மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் 
தமிழ்நாடு

மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

DIN

சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார்.

சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், 10 நாள்கள் பின்தொடர்ந்து சென்று கடைசியாக சத்யாவைக்  கொன்றதாக கூறியுள்ளார்.

சதீஷ் மேலும் கூறியிருப்பதாவது, சத்யாவை தான் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஆனால், அவரது பெற்றோர் சத்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றதால், கொன்றதாகவும் கூறியுள்ளார்.

சத்யாவின் தாய் கூறியதால் தன்னுடன் பேசுவதை சத்யா நிறுத்தி விட்டதாகவும், நாள்தோறும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றும், கொல்ல மனமில்லாமல் 10 நாள்களாக சத்யாவை பின்தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டதாகவும், இறுதியாக அவரை ரயில் முன் தள்ளிக் கொலை செய்ததாகவும் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகத்தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: முதல்வர் ஸ்டாலின்

பாலைவனம், சூரிய அஸ்தமனம், அமைதி... இனாயா சுல்தானா!

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

SCROLL FOR NEXT