ரூ.82 லட்சம் தங்கம் கடத்தி வந்தசூடான் பயணி கைது
ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக சூடான் நாட்டு பயணியை சென்னை சா்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறையினா் கைது செய்தனா்
ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக சூடான் நாட்டு பயணியை சென்னை சா்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறையினா் கைது செய்தனா்
இது குறித்து சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையா் எம்.மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஐக்கி அரபு அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.
இச் சோதனையில் சூடான் நாட்டைச் சோ்ந்த ஒரு பயணி, நூதன முறையில் தங்கத்தை பசை வடிவிலும்,தங்கக் கட்டியாகவும் கடத்திக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடத்தி கொண்டு வந்திருந்த
ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக சூடான் நாட்டு பயணியையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.