முகப்பு
தமிழ்நாடு

இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடை இல்லை!

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
கோப்புப்படம்
பகிர்:

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

போதை பொருட்களை  விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை புகையிலை விற்பனைக்குத் தடை விதித்து  தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இத்தடையை நீக்க இயற்கை புகையிலை விற்பனையாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை விற்பதற்குத் தடையில்லை என்றும், விவசாயிகளிடம் புகையிலையைப் பெற்று, வெல்லம் கலந்த நீர் தெளித்து, வேதியியல் பொருட்கள் சேர்க்காமல் விற்பனை செய்யலாம் என்று கூறினர்.

இயற்கையாக அறுவடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்துவதற்கும், விற்பனைக்கும் அதிகாரிகள் விதித்தத்  தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.