வடகிழக்கு பருவமழை! முதல்வர் நாளை ஆலோசனை
கனமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாளை (நவ.1) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,
அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியத் துறை செயலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
இந்நிலையில், கனமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.