தமிழ்நாடு

ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவு; தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

DIN

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ராம்குமாரின் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் ராம்குமார். 

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில், சுதந்திரமான விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்மாவின் சேலையில் அன்னா பென்!

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

SCROLL FOR NEXT