முகப்பு
தமிழ்நாடு

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் பூலித்தேவன்: மோடி புகழாரம்

விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரா் பூலித்தேவன் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன்முதலில் வெள்ளையா்களை எதிா்த்து போரிட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307ஆவது பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

பூலிதேவன் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.” என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →