தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மின் உற்பத்தியும் குறைந்தது!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

DIN

கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான தேக்கடி மற்றும் பெரியாறு அணைப்பகுதியில் மழை பெய்ததால், ஒரே நாளில் நீா் வரத்து அதிகரித்த நிலையில், தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வியாழக்கிழமை குறைக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணைக்குள் புதன்கிழமை வினாடிக்கு, 2,272 கன அடி தண்ணீர் வந்தது, தமிழக பகுதிக்கு தண்ணீர் வினாடிக்கு, 1,822 கன அடியாக திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் வியாழக்கிழமை அணைக்குள் விநாடிக்கு, 2,958 கன அடி தண்ணீர் வந்த நிலையில், தமிழக பகுதிக்கு வினாடிக்கு, 933 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. 

இதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நான்கு மின்னாக்கிகளில் புதன்கிழமை 164 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில், வியாழக்கிழமை 2 மின்னாக்கிகள் மூலம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 17.20 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 19.20 மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT